தொண்டாமுத்தூர் அருகே புள்ளாக்கவுண்டன்புதூர், சென்னநூர் மற்றும் தென்னமநல்லூர் கிராமங்களில் வேளாண் விரிவாக்க பிரசாரம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தின் வல்லுநர்கள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சி நிலையங்களைச் சேர்ந்த முனைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய, மாநில அரசுத் திட்டங்கள், காரிப் பருவத்திற்கு ஏற்ற பசுமை உற்பத்தி ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள், உர மேலாண்மை மற்றும் டிரோன் மூலம் மருந்து, உரம் தெளிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.