கோவை: வேளாண் பல்கலைக்கழக இளங்கலை சேர்க்கை தொடக்கம்

0பார்த்தது
கோவை: வேளாண் பல்கலைக்கழக இளங்கலை சேர்க்கை தொடக்கம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை பிரிவில் 2026-27 கல்வியாண்டிற்கான இளங்கலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் உள்ளிட்ட 17 பாடப்பிரிவுகளுக்கு ஜூன் 8-ந் தேதி வரை http://tnau.ucanapply.com மூலம் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 4,736 இடங்கள் உள்ளன. பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ. 300, பிற மாணவர்களுக்கு ரூ. 600 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.