சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்கள் நிரப்புதல், பணி நிபந்தனைகள் மேம்பாடு உள்ளிட்டவை அவர்களின் முக்கிய கோரிக்கைகளாகும். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு உடனடி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். இந்த விவகாரத்தை சட்டமன்றத்திலும் கொண்டு வர முயற்சி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.