கோவை: மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நூற்றாண்டு விழா

0பார்த்தது
கோவை உருமாண்டம்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் புதிய வகுப்பறை, நுழைவுவாயில் கட்டிடம் மற்றும் விளையாட்டு திடல் திறந்து வைக்கப்பட்டன. 14வது வார்டு கவுன்சிலர் சித்ரா தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், எம். எல். ஏ. பி. ஆர். ஜி. அருண்குமார் சிறப்புரையாற்றினார். ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர். மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி