சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று அதிமுக சார்பில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்ட அமுதா, இன்னும் இரண்டு அமாவாசைகளில் தமிழகத்தில் திமுக ஆட்சி மாறி, எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறினார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் குடும்பங்களுக்கு தலா ரூ. 2,000 வழங்கப்படும், ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.