கோவை: சிஐடியு 16வது மாநில மாநாடு!

0பார்த்தது
கோவை நவ இந்தியா சாலையில் உள்ள எஸ். என். ஆர் அரங்கில் சிஐடியு 16வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது. நவம்பர் 9 வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். எஸ். சுப்பிரமணியன் கொடியேற்றி, மாவீரர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அகில இந்திய துணைத் தலைவர் சி. பத்மநாபன் வரவேற்புரை ஆற்ற, மாநிலத் தலைவர் அ. சௌந்தரராஜன் தலைமை உரையாற்றினார். அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென் தொடக்க உரை வழங்கினார். பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் சிஐடியு நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி