கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை, சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி, பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும். உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அவர் பேசினார்.