கோவை: கடன் வாங்கும் அரசாக திமுக மாறிவிட்டது – அண்ணாமலை

2பார்த்தது
கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக அரசின் 2026-27 நிதிநிலை அறிக்கையை கடுமையாக விமர்சித்தார். சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை மக்களுக்கு பயனளிக்கவில்லை என்றும், மாநிலத்தின் கடன் சுமை 9.29 லட்சம் கோடியாக உயர்ந்து அடுத்த ஆண்டு 10.62 லட்சம் கோடியாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வருவாய் ஈட்டலில் குறைவு காணப்படுவதால் அரசு கடன் வாங்கும் அரசாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டிய அண்ணாமலை, உயர் கல்வி ஒதுக்கீடு குறைவு, 100 நாள் வேலைத் திட்டம் செயல்பாட்டில் இல்லை, கைவினைத் திட்டங்களில் குழப்பம், கோவில் புனரமைப்பு செலவில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், விவசாய வளர்ச்சி மத்திய அரசின் திட்டங்களால் மட்டுமே ஏற்பட்டுள்ளது, மாநில அரசு புதிய திட்டங்களை கொண்டு வரவில்லை, மெட்ரோ திட்டத்தில் மாநில அரசு தாமதம் போன்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

தொடர்புடைய செய்தி