கோவை: பீளமேட்டில் குடிபோதையில் தகராறு: 9 பேர் மீது வழக்கு

414பார்த்தது
கோவை: பீளமேட்டில் குடிபோதையில் தகராறு: 9 பேர் மீது வழக்கு
கோவை அவினாசி சாலையிலுள்ள ஓட்டல் மேலாளர் லோகநாதனை, குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 5 பேர் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக நேற்று புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல், சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாரில் ஏற்பட்ட தகராறில், 4 பேர் மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தி மேலாளரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாகவும் 4 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you