கோவை: முதியவர் குளத்தில் குதித்து தற்கொலை

0பார்த்தது
கோவை: முதியவர் குளத்தில் குதித்து தற்கொலை
கோவை, அண்ணாநகரைச் சேர்ந்த 72 வயதான ரங்கராஜன், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மன வேதனையில் கடந்த வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியேறினார். அவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகலில் தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள கிருஷ்ணாம்பதி குளத்தில் குதித்துள்ளார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றபோதும், அவர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி