கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் தாக்கத்தால் தீ வேகமாகப் பரவி, கரும்புகை பல கிலோமீட்டர் தூரம் வரை தென்பட்டதால் அப்பகுதி புகைமண்டலமாக மாறியது. உயர்ந்த கட்டிடங்களில் இருந்த பொதுமக்கள் தீ விபத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் காட்சிகள் வைரலானது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.