கோவையில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து தமிழக முதல்வர்
விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய மனிதநேயமற்ற குற்றச் செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த துயரம் பகிர்ந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக செயல்படுவோருக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.