கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏரி கரையில் மீட்கப்பட்ட சிறுமியின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், குற்றவாளிகளை விரைந்து கைது செய்து விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட்டார். சிறுமியின் உடலுக்கு கூராய்வு பணி நடைபெற்று வருகிறது.