கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தனியார் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறை சார்பில் மாநில அளவிலான எலெகன்சா 26 ஃபேஷன் ஷோ இன்று நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 400-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, துர்க்கை, லட்சுமி, வாணி உள்ளிட்ட தெய்வங்களின் திருவுருவங்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சேலை அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. கல்லூரி முதல்வர் கீதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஃபேஷன் வடிவமைப்பாளர்கள் அருண் பாலகிருஷ்ணா, வர்ஷா சி. கே, கெளஷிகா குமரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, வெற்றியாளர்களுக்கு ரூ. 50,000 மதிப்பிலான பரிசுகள் மற்றும் 'மிஸ்டர் & மிஸ் எலெகன்சா’26’ உள்ளிட்ட விருதுகளை வழங்கினர்.