கோவையில் பவிழம் ஜுவல்லர்ஸ் மற்றும் அன்னை அறக்கட்டளை சார்பில், 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும் பரிசுகளும் இன்று வழங்கப்பட்டன. இந்த விழா கோவை காந்திபுரத்தில் உள்ள பவிழம் ஜுவல்லரியில் நடைபெற்றது.
அன்னை அறக்கட்டளை தலைவர் வேலுசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிறுவன மேலாண் இயக்குநர் லிஜோ சுங்கத் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். அவரது உரையில், ஏழ்மை காரணமாக யாரும் கல்வியை இடைநிறுத்தக்கூடாது என்றும், மேல் கல்வியில் சிறந்து விளங்கி வாழ்வில் உயர வேண்டும் என்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.