கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் அதிக அடையாள அட்டையும், சம்பளமும் கோவையில் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒப்பந்த பணியாளர்களின் ஊதிய உயர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாதம் ஒருநாள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்த முதலமைச்சரிடம் கோரப்படும் என்றும் கூறினார். மேலும், பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதில் அலட்சியம் காட்டாமல் இருக்க பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், இடமாற்றங்கள் பழிவாங்கும் நோக்கில் நடைபெறாதவாறு அதிகாரிகள் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.