காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியை முன்னிட்டு, தென்னக ரயில்வே கோவை மற்றும் பனாரஸ் இடையே இரண்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. முதல் சிறப்பு ரயில் (06005) டிசம்பர் 3 அன்று கோவையில் இருந்து புறப்பட்டு டிசம்பர் 5 அன்று பனாரஸ் சென்றடையும். மறுமார்க்க ரயில் (06006) டிசம்பர் 9 அன்று பனாரஸில் இருந்து புறப்பட்டு டிசம்பர் 12 அன்று கோவை வரும். இரண்டாவது சிறப்பு ரயில் (06013) டிசம்பர் 9 அன்று கோவையில் இருந்து புறப்பட்டு டிசம்பர் 11 அன்று பனாரஸ் செல்லும். இதன் மறுமார்க்க ரயில் (06014) டிசம்பர் 15 அன்று பனாரஸில் இருந்து புறப்பட்டு டிசம்பர் 18 அன்று கோவை வந்தடையும். இந்த ரயில்களில் 10 3-டயர் ஏசி பெட்டிகள், 2 3-டயர் எகானமி ஏசி பெட்டிகள், 6 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் மற்றும் 1 இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டுள்ளன. இதில் 6 ஏசி பெட்டிகள் காசி தமிழ் சங்கமம் பங்கேற்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.