கோவை: மகா சிவராத்திரி: சிறப்பு ரயில் அறிவிப்பு

7பார்த்தது
கோவை: மகா சிவராத்திரி: சிறப்பு ரயில் அறிவிப்பு
மகா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் மற்றும் கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து பிப்ரவரி 13-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில் (06113) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து பிப்ரவரி 16-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்படும் ரயில் (06114) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த சிறப்பு ரயில் கோவை வழியாக காயன்குளம், மாவேலிக்கரா, செங்கன்னூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

தொடர்புடைய செய்தி