கோவை போத்தனூரில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 6 மற்றும் 9 வயதுடைய சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 54 வயது ராபர்ட் ராஜ் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். சம்பவத்தன்று, சிறுமிகள் இருவரும் தெருவில் நடந்து சென்றபோது, ராபர்ட் ராஜ் அவர்களின் கைகளைப் பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமிகள் அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்தனர். பெற்றோரின் புகாரின் பேரில், கோவை மாநகர தெற்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராபர்ட் ராஜ் (54) என்பவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் ராபர்ட் ராஜ் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.