கோவை: பெண்களுக்கு பாதுகாப்பு கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
கோவை: பெண்களுக்கு பாதுகாப்பு கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த கோரியும், இதற்கான நடவடிக்கையில் அலட்சியம் காட்டிய மாவட்ட நிர்வாகத்தையும் காவல்துறையையும் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை விமான நிலையம் பின்புறம் மாணவி ஒருவருக்கு நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாநில குழு உறுப்பினர் எஸ். ராஜலக்ஷ்மி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி