மேட்டுப்பாளையம், பங்களாமேட்டில் வசித்து வந்த மில் தொழிலாளி சுமித்ரா (26) என்பவர் மின்விசிறி மாட்டும் இரும்பு கம்பியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊட்டி, மஞ்சூர், காந்தி மட்டம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (40) என்பவரின் மனைவி சுமித்ரா. பன்னீர்செல்வம் ஜே.சி.பி. ஆபரேட்டராக உள்ளார். தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.