கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கோவை மாவட்ட அமைச்சர்கள் சம்பத்குமார், விக்னேஷ் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவில்லை.