கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசிக்கும் முத்துக்குமார் என்பவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 19ம்தேதி செவ்வாய்க்கிழமை, சிறுமி முத்துக்குமார் வீட்டிற்கு விளையாடச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமி பயந்து வீட்டிற்கு வந்து தாயிடம் நடந்ததை கூறியதையடுத்து, பெற்றோர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் முத்துக்குமாரை விசாரித்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.