கோவை: பல்சமய கிறிஸ்மஸ் இன்னிசை விழா!

0பார்த்தது
கோவை மாநகரில் உள்ள அனைத்து திருச்சபைகளும் இணைந்து நடத்திய பல்சமய கிறிஸ்மஸ் இன்னிசை விழா டவுன்ஹால் அருகிலுள்ள புனித மைக்கேல் அதிதூதர் பேராலயத்தில் இன்று நடைபெற்றது. கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு மதத் தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கிறிஸ்மஸ் இன்னிசை பாடல்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், கிறிஸ்து பிறப்பு நாடகம், நடனங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டு பாராட்டினர்.