கோவை: கொலை வழக்கு - சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை

81பார்த்தது
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே, தங்கையின் காதலனை கத்தியால் குத்திக் கொன்ற 16 வயது சிறுவனுக்கு கோவை இளஞ்சிறார் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று முன்தினம் (மே 15) தீர்ப்பளித்தது. 22 வயது கூலித்தொழிலாளிக்கும், சிறுமியின் அண்ணனுக்கும் முன்விரோதம் இருந்த நிலையில், மீண்டும் ஏற்பட்ட தகராறில் சிறுவன் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி