கோவை: பாஜக நிர்வாகிகளுடன் தேசிய செயலாளர் சந்திப்பு

0பார்த்தது
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போத்தனூர் கார்மல் நகரில் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அரவிந்த் மேனன், கிளை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்பகுதியில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அவர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் திட்டங்களை நிர்வாகிகளுக்கு விளக்கினார். இந்த சந்திப்பில் மாவட்ட முன்னாள் தலைவர் கே. வசந்தராஜன், மாவட்ட தலைவர் சந்திரசேகர், மண்டல் தலைவர் கோகுலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் டாக்டர் மாதேஸ்வரன், OBC அணி மண்டல் துணை தலைவர் மயிலதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி