வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழக வருகை மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர், கருத்து சுதந்திரம் குறித்து பேச திமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை என விமர்சித்தார். பராசக்தி திரைப்படத்தில் அண்ணாவின் வசனங்கள் நீக்கப்பட்டது அரசியல் காரணங்களால் இருக்கலாம் என்றும், திமுகவால் பாஜகவை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி குறித்து, அனைவரும் ஒன்றாக இருப்பதே நல்லது என்ற தனது நிலைப்பாட்டை வலியுறுத்திய அவர், திமுக கூட்டணிக்குள் குழப்பங்கள் இருப்பதாகவும், பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.