கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில், மனிஷ் தியேட்டர் அருகிலுள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் சிலர் இரவு 12 மணிக்குப் பிறகும் போதையில் அப்பகுதி வீடுகளின் கதவுகளை தட்டுவது, சாலையில் தள்ளாடி விழுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பெண்கள், முதியோர் அச்சத்தில் உள்ளதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.