கோவை: சுகாதாரமற்ற இறைச்சி - ஓட்டலுக்கு நோட்டீஸ்

520பார்த்தது
கோவை: சுகாதாரமற்ற இறைச்சி - ஓட்டலுக்கு நோட்டீஸ்
கோவை குனியமுத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் ஆன்லைனில் வாங்கிய கோழி இறைச்சி சுகாதாரமற்ற நிலையில் இருந்ததாக அஞ்சலி என்பவர் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டலின் சமையல் அறை மற்றும் இருப்பு அறையை ஆய்வு செய்தனர். ஆய்வில் சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டன. மேலும், தண்ணீர் பரிசோதனை, பூச்சி மேலாண்மை மற்றும் சுகாதாரப் பணிகளுக்கான பதிவேடுகள் பராமரிக்கப்படாததும் தெரியவந்தது. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி