கோவை: நான் முதல்வன் பல்கலைக்கழக செயல்பாட்டு மையம் திறப்பு

2பார்த்தது
நேற்று, பாரதியார் பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் பல்கலைக்கழக செயல்பாட்டு மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இணையவழி மூலம் திறந்து வைத்தார். இந்த மையம், 300-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்துறைக்குத் தேவையான திறன் மேம்பாடு, பயிற்சி, மதிப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு இணைப்புகளை வழங்கும். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி பி. ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று, திட்டத்தின் பயன்களைப் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி