கோவையின் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை

562பார்த்தது
கோவை நகரில் 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை முன்னிட்டு, இன்று போலீசார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி, குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆர் எஸ் புரம் பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ரயில் நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி