கோவை ஈச்சனாரி இரத்தினம் கல்லூரியில் இன்று ஐந்திணை என்ற பெயரில் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாரம்பரிய உடை அணிந்து வள்ளி கும்மி, மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும் கோலப்போட்டி, உறியடி, கயிறு இழுத்தல், முளைப்பாரி போன்ற பாரம்பரிய போட்டிகளும் நடைபெற்றன. கல்லூரி வளாகம் திருவிழா கோலத்தில் காட்சியளித்தது.