கோவையில் இன்று நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதன் மூலம், பி. எம். கிசான் திட்டத்தின் 21வது தவணையாக நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ. 18,000 கோடி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளும், கோவையைச் சேர்ந்த 44 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகளும் இதன் மூலம் பயனடைகின்றனர். பிரதமர் மாநாட்டை தொடங்கி வைத்து, சிறந்த இயற்கை விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி, விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.