கோவை மாவட்டம் பாலத்துறை அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 40 மாணவர்கள், ரோட்டரி கிளப் சார்பில் மூன்று நாள் கல்விச் சுற்றுலா சென்றனர். பெங்களூருவில் ரயில் மூலம் பயணம் செய்து, அறிவியல் கண்காட்சி மற்றும் அருங்காட்சியகங்களைப் பார்வையிட்டனர். பாடப்புத்தகங்களில் படித்தவற்றை நேரில் கண்ட மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சுற்றுலா முடிவில் விமானம் மூலம் கோவைக்குத் திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் இன்று அதிகாலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.