கோவை: மது போதையில் தந்தை மகன் கைகலப்பில் மகன் மரணம்!

0பார்த்தது
கோவை: மது போதையில் தந்தை மகன் கைகலப்பில் மகன் மரணம்!
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, மதுபோதையில் வீட்டிற்கு வந்த மகன் விக்னேஷ் குமார் (28) தந்தை செல்லத்துரை (55) உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறின் போது தள்ளுமுள்ளுவில் விக்னேஷ் குமார் கீழே விழுந்து தலையில் காயம் அடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக மதுக்கரை போலீசார் தந்தை செல்லத்துரை மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி