கோவை: சுல்தான்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

0பார்த்தது
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் வடவள்ளி, மேகாடு பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் தனியார் முட்டைக் கோழிப் பண்ணையால் விவசாய நிலங்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று சுல்தான்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். பண்ணைக் கழிவுகளால் கால்நடைகள் இறக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர். பண்ணையை உடனடியாக அகற்றாவிட்டால் குடியிருப்புப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர். வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தொடர்புடைய செய்தி