கோவை: பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்

318பார்த்தது
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணி நிலையானை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று 3 மணி நேர கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் மது வாங்க வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். இந்த போராட்டத்தால் மதுபான விற்பனை 15–20% வரை பாதிக்கப்படும் என பணியாளர்கள் தெரிவித்தனர். தங்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி