கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள எம். ராயர் பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு 50 ஆண்டுகளாக மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் விவசாயம் மற்றும் விசைத்தறித் தொழில் பாதிக்கப்பட்டது. திமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கோவை மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். முதல்வர் உத்தரவின் பேரில், தற்போது அந்த கிராமங்களுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் கிராம மக்கள் செந்தில் பாலாஜிக்கு நன்றி தெரிவித்தனர்.