தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி போன்றது என கோவையில் செய்தியாளர் சந்திப்பில் விமர்சித்தார். மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது என்றும் கூறினார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலேயே செல்வதாகவும், அரசியலுக்கு வந்துள்ள விஜயை வரவேற்றாலும், இன்ஜின் குறித்து பேச அவருக்கு தகுதி இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார். 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி மக்கள் ஏற்றுக்கொண்டால்தான் அது சக்தி எனக் குறிப்பிட்ட அவர், விஜயின் பேச்சில் ஆழமான கருத்து இல்லை என்றார். சொந்த வேலைகள் இருப்பதால் அதிக பயணம் செய்ய முடியாது என்றும், கட்சி வேறு பொறுப்பாளர்களை நியமிக்கலாம் என்றும் கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும், கட்சி அளிக்கும் எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக உள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.