கோவை: பெரிய குயிலை ஊர்மக்கள் கொண்டாடிய பள்ளி நூற்றாண்டு விழா

69பார்த்தது
கோவை: பெரிய குயிலை ஊர்மக்கள் கொண்டாடிய பள்ளி நூற்றாண்டு விழா
கோவை பெரிய குயிலையில் 1907ம் ஆண்டு துவங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. பெரிய குயிலை ஊர் பொதுமக்கள் சார்பாக கொண்டாடப்பட்ட நூற்றாண்டு விழாவில் ஜோதி தீபம் ஏற்றி அனைவரும் பள்ளிக்கு ஊர்வலம் வந்தனர். 

இந்நிகழ்வில் 80 வயதுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். இதில் பள்ளிக் கல்வித்துறை தலைவர் தலைமையில் அனைவரும் நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, மாணவர்களின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊர்த்தலைவர் வேலுக்குட்டி தலைமை வகித்தார். இதில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்களை கௌரவித்தனர்.

தொடர்புடைய செய்தி