பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியில் உள்ள புளியங்கண்டி தென்னந்தோப்புக்குள் நேற்று ஒரு காட்டுயானை புகுந்து, 35-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். யானையின் நடமாட்டம் குறித்து விசாரித்த வனத்துறையினர், சேதமடைந்த மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.