கோவை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பூ வியாபாரி சரஸ்வதி (55) என்பவரிடம் பர்ஸ் திருட முயன்ற பெண் கைது செய்யப்பட்டார். பூ மார்க்கெட்டில் இருந்து பூக்கள் வாங்கி உக்கடம் நோக்கி பேருந்தில் வந்தபோது, பின்னால் நின்ற பெண் பர்ஸை திருட முயன்றார். இதைக் கவனித்த சரஸ்வதி, பொதுமக்கள் உதவியுடன் அந்தப் பெண்ணைப் பிடித்து உக்கடம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அந்தப் பெண் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த துர்கா (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.