கோவை: கடையில் நகை பறிப்பு: பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை

0பார்த்தது
கோவை: கடையில் நகை பறிப்பு: பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை
கோவை ரத்தினபுரியில் உள்ள பரிசுப் பொருள் கடையில் நகை பறித்த வழக்கில், மதுரை மேலூரைச் சேர்ந்த தெய்வநதி (36) என்பவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை 4-வது சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த பிப்ரவரி 11, 2022 அன்று, கடையில் பரிசுப் பொருட்கள் வாங்குவதாக நடித்து, ஊழியர் செல்வராணி (60) மீது பூச்சிமருந்து பீய்ச்சி அடித்து, கழுத்தில் இருந்த 7 பவுன் நகையை பறிக்க முயன்றார். ஆனால் அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். நீதிபதி விக்னேஷ் மது இந்த தண்டனையை நேற்று வழங்கினார்.

தொடர்புடைய செய்தி