கோவை மாவட்டம், துடியலூா் அருகே இளம்பெண்ணின் சடலம் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், திவ்யா (25) என்ற திருமணமான பெண்ணை, காதலன் தமிழரசன் (30) வாக்குவாதத்தில் தலையில் கட்டையால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. கொலையை மறைக்க சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற தமிழரசனை போலீஸாா் கைது செய்தனா்.