கோவையில் டிஜிட்டல் கைது - ரூ. 20 லட்சம் மோசடி

609பார்த்தது
கோவையில் டிஜிட்டல் கைது - ரூ. 20 லட்சம் மோசடி
கோவை பீளமேட்டைச் சேர்ந்த 63 வயது தொழிலதிபரிடம், மும்பை சிபிஐ அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மர்ம நபர், ஆதார் கார்டை பயன்படுத்தி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி டிஜிட்டல் கைது என மிரட்டியுள்ளார். வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என கூறி ரூ. 20 லட்சத்தை மற்றொரு கணக்குக்கு மாற்றச் செய்தார். பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் மோசடி தெரியவந்தது. இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி