சிவகங்கை: ஓசியில் ஆம்லெட் தரமறுத்த ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்

58பார்த்தது
சிவகங்கை: ஓசியில் ஆம்லெட் தரமறுத்த ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (46). இவர் சரவணம்பட்டியில் குடும்பத்துடன் தங்கி துடியலூர் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர், ஓட்டலில் இருந்தபோது 2 பேர் வந்து 4 சிக்கன் ரைஸ் மற்றும் 8 ஆம்லெட் வாங்கி சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அதே 2 பேர் தாங்கள் வாங்கி சென்ற சிக்கன் ரைசில் பூச்சி கிடந்தது. எனவே அதற்கு ஈடாக 10 பிரியாணி பொட்டலம் கேட்டனர். இதனையடுத்து ராமச்சந்திரன் அவர்களிடம் 10 பிரியாணி பொட்டலம் கொடுத்தார்.
அதனை பெற்றுக்கொண்ட இருவரும் மீண்டும் தங்களுக்கு சிக்கன் மற்றும் ஆம்லெட் தருமாறு கேட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்த ராமச்சந்திரனிடம் இருவரும் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி ராமச்சந்திரனை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதனைத்தடுக்க முயன்ற ராமச்சந்திரனின் சகோதரரையும் தாக்கினர். பின்னர் அவர்களை மிரட்டிவிட்டு இருவரும் காரில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஓட்டல் உரிமையாளரை தாக்கியது ராமநாதபுரம் கமுதியை சேர்ந்த சக்திவேல்(23), துடியலூரை சேர்ந்த பஹீம்அஹமத் (24) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி