போத்தனூரில் பாறை உடைப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

177பார்த்தது
கோவை போத்தனூர் அண்ணாபுரம் அருகே தனியார் வீட்டுமனை திட்டத்திற்காக சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள 100 ஆண்டுகளுக்கும் மேலான இயற்கை பாறைகள் பெரிய இயந்திரங்கள் மூலம் உடைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மண் ஈரப்பதம் குறைந்து நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், சுற்றுச்சூழல் சேதம் மற்றும் நீர் வறட்சி ஏற்படும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கனிமவளத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செட்டிபாளையம் பகுதி இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி