எஸ்.பி.வேலுமணி சொந்த மாவட்டத்திலேயே சொதப்பல் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கு

928பார்த்தது
எஸ்.பி.வேலுமணி சொந்த மாவட்டத்திலேயே சொதப்பல் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கு
சென்னையில் இன்று பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி எஸ்.பி.வேலுமணியை கடுமையாக சாடினார். அவர் பேசுகையில், திருப்பூர், ஊட்டி, கோவை என மூன்று மாவட்டங்கள் உள்ள 21 தொகுதிகள் எஸ்.பி.வேலுமணி பொறுப்பில் விடப்பட்டன. ஆனால் அதில் மூன்று தொகுதிகளில் மட்டும் அதிமுக வென்றது. அவரது சொந்த மாவட்டமான கோவையில் உள்ள , தொண்டாமுத்தூரில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். அவர் மீதான தவறுகளை மறைக்க இபிஎஸ் மீது பொய்க்குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர் என்றார்.

தொடர்புடைய செய்தி