தமிழக முதல்வர்
விஜய் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட உத்தரவிட்டிருந்த நிலையில், பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை, கடந்த சட்டமன்ற தேர்தலில் த. வெ. க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராமநாதன் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுகாதார வசதிகள் மற்றும் அடிப்படை சேவைகள் குறித்து பார்வையிட்டார். மேலும், உணவகத்திற்கு வரும் பொதுமக்களிடமும் அவர்களின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.