
கோவை: வாக்கு வீரன் காத்தாடி - மக்கள் வரவேற்பு!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையைச் சேர்ந்த குறுந்தொழில் கலைஞர் UMT ராஜா நூதன விழிப்புணர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படும் இருவாச்சிப் பறவையை வாக்கு வீரன் என்ற கதாபாத்திரமாக உருவகப்படுத்தி பெரிய காத்தாடி வடிவமைத்துள்ளார். பட்டு வேட்டி, வெள்ளை பனியன் அணிந்த தோற்றத்துடன் எனது வாக்கு எனது உரிமை, 100% வாக்குப்பதிவு என்ற வாசகங்களுடன் அந்த காத்தாடியை வானில் பறக்கவிட்டு பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்த முயற்சி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.























